பணம் கேட்டு தவெக நிர்வாகி அரிவாளால் தாக்க முயற்சி
Jul 26, 2026, 18:00 IST1785069038000
ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரிக்கு சென்று பணம் கேட்டு தவெக நிர்வாகி அரிவாளால் தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் மேற்கு தவெக ஒன்ரிய செயலாளர் பாலமுருகன் கல்குவாரிக்கு சென்று கல்குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. பணம் கொடுக்காத ஆத்திரத்தில் கல்குவாரி அறையில் இருந்த கம்யூட்டர், டிவி உள்ளிட்ட பொருட்களை பாலமுருகன் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்குவாரி உரிமையாளரிடம் அளித்த புகாரின் பேரில், பாலமுருகன் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

