சொந்த கட்சியினரையே ஜாதி பெயரை சொல்லி தாக்குதல்- தவெக நிர்வாகி அராஜகம்

 
a

சொந்த கட்சியினரையே ஜாதி பெயரை சொல்லி தாக்கிய  தவெக மாவட்ட செயலாளரின் சகோதரர் அராஜகம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 


திருவாரூர் வடக்கு மாவட்ட தவெக செயலாளர் மதன். மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ். இவர்கள் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்து பனிப்போர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியானது. திரைப்படத்தை மதனின் சகோதரர் மனோஜ்(33), அவரது நண்பர் தமிழ் ஆகியோர் பார்த்தனர். திரைப்படம் முடிந்து இருவரும் திரையங்கின் வெளியே வந்தபோது, மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ் தரப்பு சார்பில் விதைப்பந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


அப்போது கட்சிக்குள் தனக்கு எதிராக வேலை செய்ததால், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆனந்த்ராஜை தாக்கி அவரது ஜாதி ரீதியாக இழிவாக பேசியுள்ளார் மனோஜ். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து விலக்கிவிட்டனர்.