செந்தில் பாலாஜி இடங்களில் ஐடி ரெய்டு - கார் கண்ணாடி உடைப்பு ; திரும்பி சென்ற அதிகாரிகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமானவரி சோதனையின் போது திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | IT raids across Tamil Nadu in around 40 locations at various Government contractors' residences and offices who have alleged connection with Minister Senthil Balaji. Raids are currently underway in Chennai, Karur and other places. More details awaited: Sources
— ANI (@ANI) May 26, 2023
(Visuals… pic.twitter.com/vSM3gYYxiQ
வருமானவரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர் கார் கண்ணாடியை உடைத்ததால் அப்பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனையிட வந்த வருமானவரித்துறை பெண் அதிகாரியை ஐடி கார்டை காட்டுங்கள் என்று கூறி பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் வருமானவரித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சென்றுள்ளதாக தெரிகிறது.