பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்- போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை

 
s

பஞ்சாபில் கபடி போட்டியில் பவுல் விதிகளை மீறியதை குற்றஞ்சாட்டியதால் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாமில் பல்கலைக்கழக அணிகளுக்கிடையான அகில இந்திய கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலம் குரு ஹாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த கபாடி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 


இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடைபெற்றது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பவுல் பிளே தொடர்பாக வீராங்கனை நடுவரிடம் புகார் அளிக்கவே, அவர் தமிழக வீராங்கனையை தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்துள்ளனர். நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலைக்க மாணவிகள் வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால் தற்காலிகமாக போட்டி நிறுத்தப்பட்டு, தமிழ்நாடு அதிகாரிகள் பஞ்சாப் நிர்வாகம் மற்றும் போட்டி நடத்தும் அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர். 

தமிழக வீரர்கள் புகார் அளித்தும் பஞ்சாப் போலீசார் வாங்க மறுத்த நிலையில் பஞ்சாப் வீரர்கள் அளித்த புகார் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் பயிற்சியாளர் பாண்டியராஜனை பஞ்சாப் போலிசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்*