தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் - முத்தரசன் கண்டனம்!!

 
mutharasan

நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று (24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செய்தியாளர் கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக  தண்டிக்கப்பட வேண்டும்.  

mutharasan

சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேர்காணல் நடத்திய நியூஸ் 18 கார்த்திகை செல்வன் குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெளியிடும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.