“நேச பிரபு மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும்” - பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தல்

 
tn

நியூஸ்7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று  பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

pr pandiyan

இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன்  கூறியுள்ளதாவது:- மக்கள் பிரச்னைகளை, அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை துணிவுடன் களத்தில் நின்று எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது; 

murder

நியூஸ்7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும்; முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்நேச பிரபு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.