'ஜெய் ஸ்ரீ ராம்' எனக் கூறிய பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு!
திருப்பத்தூர் அருகே சாப்பிட வந்த இடத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என சொன்னதால் பாஜக நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் நேற்றிரவு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் 1-ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதற்காக மாதனூர் பகுதிகளில் பேனர் வைக்க இடம் தேர்வு செய்து விட்டு அங்கிருந்த தனியார் உணவகத்தில் (ராஜஸ்தானி தாபா) உணவருந்த சென்ற பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் லோகேஷ் என்பவர் சாப்பிட அமரும் போது ஜெய் ஶ்ரீராம் என கூறி விட்டு அமர்ந்ததாகவும் அப்போது அருகில் இருந்த சில இளைஞர்கள் இங்கு எதற்கு ஜெய் ஸ்ரீ ராம் என கூறுகிறார்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு லோகேஷ் மீது அந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.