கல்வி விருது விழாவில் தவெக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு

 
விஜய்

சென்னை திருவான்மியூரில் நடைபெற்றுவரும் கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கிவருகிறார். சென்னை திருவான்மியூரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்கிவருகிறார் விஜய்.725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்றுள்ளனர். த.வெ.க. நிர்வாகிகள் மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவால் வலிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சக நிர்வாகிகள் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.