பெருவில் சோகம்: நாஸ்கா கோடுகளைப் பார்க்கச் சென்ற விமானம் நொறுங்கி 13 பேர் பலி..!!

 
Q

பெரு நாட்டில் நாஸ்கா பாலைவனத்தில் பிரபல நாஸ்கா கோடுகள் உள்ளன. சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வியக்கத்தக்க வகையில் பெரிய அளவிலான விலங்குகளின் வரைபடங்கள் கோடுகள் அமைப்பில் இங்கு இடம்பெற்று இருக்கும். இவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த பெரு பழங்குடியின மக்களால் ஏற்படுத்தப்பட்டது என கருதப்படுகிறது. உலகின் உள்ள பல்வேறு மர்மமான இடங்களில் நாஸ்கா கோடுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உருவ அமைப்பில் வரையப்பட்டுள்ள இந்த கோடுகளை வான்வழி வழியாக பார்த்தால் முழுமையாக தென்படும். அந்த வகையில், நாஸ்கா கோடுகள் காண்பதற்கான ஐரோப்பியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பெருவை நாட்டை சேர்ந்த தனியார் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி உட்பட இத்தாலியை சேர்ந்த ஏழு சுற்றுலா பயணிகள், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இருவர், ஜெர்மன் நாட்டை சேர்ந்த இருவர் என விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இத்தாலி நாட்டை சேர்ந்த ஏழு பேர் 18 முதல் 54 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து நாஸ்கா அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஐகா நகரத்தில் இருந்து ஏரோடியானா என்ற நிறுவனம், நாஸ்கா கோடுகளை பார்க்க சுற்றுலாப் பயணிகளை ஏற்று சென்றி சென்றபோது இந்த விபத்து நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரோடியானா நிறுவனத்தின் இணையதளத்தில் அப்பகுதிக்கு சுமார் 14 ஆண்டுகளாக செஸ்னா கிராண்ட் கேரவன் விமானங்கள் மூலம் சுற்றுலா சேவையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பெரு நாட்டின் அதிபர் கெய்கோ புஜிமோரி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சுற்றுலா விமானம் விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.