மத்திய சென்னை வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு..!

 
1

தயாநிதி மாறன் – திமுக

ரொக்கம்

தயாநிதி மாறன் கையில் ரூ.69,850 ரொக்கமாக இருப்பதாகவும், அவரது மனைவி பிரியாவிடம் ரூ.55,480 ரொக்கமாக இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

வாகனம்

2016-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டொயோட்டா இன்னோவா கார் தனது பெயரில் சொந்தமாக இருப்பதாக தயாநிதி மாறன் அவரது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

நகை

ரூ.10,57,670 மதிப்புள்ள 42 கிராம் தங்க நகைகள் தனது பெயரில் இருப்பதாக தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அதேபோல், அவரது மனைவி பேயரில், ரூ.2,79,68,412 மதிப்புள்ள 2502 கிராம் தங்க நகை மற்றும் 18 கிலோ வெள்ளி நகைகள் இருப்பதாக தயாநிதி மாறன் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அசையும் சொத்துகள்

தயாநிதி மாறனிடம் மொத்தம் ரூ. 7,81,05,240 மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனைவி பிரியா பெயரில் ரூ.4,73,19,601 மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாக தயாநிதி மாறன் அவரது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அசையா சொத்துகள்

தயாநிதி மாறனிடம் மொத்தம் ரூ.59,000 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனைவி பிரியா பெயரில் ரூ.4,52,86,196 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

பார்த்தசாரதி – தேமுதிக(அதிமுக கூட்டணி)

மத்திய சென்னையில் தேமுதிக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி போட்டியிடுகிறார். அவரது சொத்து விவரங்கள் வருமாறு

ரொக்கம்

பார்த்தசாரதியிடம் கையில் ரொக்கமாக ரூ.3,00,000 இருப்பதாகவும், அவரது மனைவி கையில் ரூ.50,000 ரொக்கமாக இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

வாகனம்

ரூ,8,00,000 லட்சம் மதிப்பிலான மஹிந்திரா XUV கார் தனது பெயரில் இருப்பதாக பார்த்தசாரதி வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நகை

பார்த்தசாரதி பெயரில் ரூ.14,88,000 மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரது மனைவி பெயரில் ரூ.17,84,000 மதிப்புள்ள 280 கிராம் தங்கம் மற்றும் 60 கிராம் வெள்ளி நகை உள்ளதாக வேட்புமனுவில் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியிடம் மொத்தம் ரூ.43,18,952 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனைவி பெயரில் ரூ.18,81,429 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக பார்த்தசாரதி வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்துகள்

பார்த்தசாரதியிடம் மொத்தம் ரூ.80,90,000 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனைவி பெயரில் ரூ.26,70,000 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார்.

வினோஜ் பி செல்வம் - பாஜக

மத்திய சென்னை பாஜக வேட்பாளராக வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் வருமாறு

ரொக்கம்

வினோஜ் கையில் ரூ.3,50,600 ரொக்கமாக இருப்பதாகவும், அவரது மனைவி கையில் ரூ.1,78,400 ரொக்கமாக இருப்பதாக வேட்புமனுவில் வினோஜ் குறிப்பிட்டுள்ளார்.

வாகனம்

ரூ,42,03,110 மதிப்பிலான ஸ்கோடா சூபர்ப் ரூ,85,04,600 மதிப்பிலான பென்ஸ் மற்றும் ரூ.45,12,400 மதிப்பிலான டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் தனது பெயரில் இருப்பதாக வேட்புமனுவில் வினோஜ் தெரிவித்துள்ளார்.

நகை

ரூ.65,55,000 மதிப்பிலான 1140 கிராம் தங்க நகைகள் தனது பெயரில் இருப்பதாக வினோஜ் தெரிவித்துள்ளார். அதேபோல், அவரது மனைவி பெயரில், ரூ,70,40,000 மதிப்பிலான 1200 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி நகைகள் இருப்பதாக வேட்புமனுவில் வினோஜ் குறிப்பிட்டுள்ளார்.

வினோஜ் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னிடம் ரூ.15,50,50,963 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் ரூ.1,28,72,300 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் வினோஜ் தெரிவித்துள்ளார்.

அசையா சொத்துகள்

வினோஜ் பெயரில் ரூ.12,65,21,000 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும்,அவரது மனைவி பெயரில் ரூ. 2,36,00,000 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் வினோஜ் குறிப்பிட்டுள்ளார்.