ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - இன்று விசாரணை

சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சமீபத்தில் இவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கை கிழமை நீதிமன்றங்கள் ரத்து செய்த நிலையில் , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் மீது தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 2001 - 2006 ஆம் வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது 2006 திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு பன்னீர்செல்வத்தை விடுதலை செய்தது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.