சட்டப்பேரவை தேர்தல்- நாளை முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் நாளை ( நவம்பர் 11 ) முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகளுக்கு சட்டப்பேரவை மற்றும் பல்வேறு தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன்படி, தமிழக சட்டப்பேரவையில் காலம் முடியவடையும் நாளில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்.
இதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நாளை முதல் ( நவம்பர் 11ம் தேதி ) பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பொதுச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும். குறிப்பாக, முதலில் வருபவர்களுக்கு முன்னூரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்,


