அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்.. ஒருவர் கைது..
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீதான தாக்குதல் சம்பவத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் கமுதி அருகே நெல்லிக்குளத்தைச் சேந்தவர் காளிகுமார். சரக்கு வாகன ஓட்டுனரான காளிகுமார் நேற்று திருச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது சேத்தநாயக்கன்பட்டிவிளக்கு அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தை மறித்துள்ளனர். தொடர்ந்து காளிகுமாரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பியோடினர். இவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காளிகுமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்காக சென்று அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான 19 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது போராட்டக்காரர்கள் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தினர். பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நெல்லிகுளத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும், எஸ்.பி. கண்ணன் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பெண் டிஎஸ்பி தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்... தடுக்க முயன்ற காவலர்கள் மீதும் தாக்குதல்... அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் பரபரப்பு#Virudhunagar | #Aruppukottai | #Protest | #DSP | #Attack |… pic.twitter.com/EpApqsCApV
— Polimer News (@polimernews) September 3, 2024