விஷச்சாராய வழக்கு - சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏ.எஸ்.பி கோமதி நியமனம்

 
tn

விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க  சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக, ஏ.எஸ்.பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த நபர்கள் விஷ சாராயம் அருந்தியதில்  இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விஷ சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவித்த நிலையில் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

tn

முதல்வரின் உத்தரவின் பேரில் இவ்வழக்கை குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமைய இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அத்துடன் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர்  வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

govt

இந்நிலையில் விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மரக்காணம் விஷச்சாராய வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக ஏ.எஸ்.பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்கை ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.