ராஜினாமா கடிதத்தை அவரை ரெடியா வச்சிக்க சொல்லுங்க..- அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பரந்தாமன் பதிலடி..!
தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘இளவரசர் உதயநிதி எங்கள் தலைவர் அளவுக்கு பேச வேண்டாம். எங்களுக்கு முதலில் பதில் கூறுங்கள்.. மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்து விட்டால் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.. இதை நான் உதயநிதிக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன்.. தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் உங்கள் அப்பாவை வேண்டுமானால் கூட்டி வாருங்கள்.. திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியிலிருந்து விலக உதயநிதி தயாரா?’ என அவர் சவால் விடுத்திருந்தார்.
இது குறித்து பேசிய திமுக வேட்பாளர் பரந்தாமன், தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்துப் பேசினார். அப்போது, “9ஆம் தேதி ஆதவ் அர்ஜுனாவை ராஜினாமாவுக்கு தயாராக இருக்க சொல்லுங்க” என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை குறிப்பிட்டு, ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக பரந்தாமன் தெரிவித்த இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்பாளர்களின் பேச்சுகள் தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
"9ம் தேதி ராஜினாமா கடிதத்தை அவரை ரெடியா வச்சிக்க சொல்லுங்க.." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பரந்தாமன் பதிலடி #Maduranthakam | #Dharapuram | #BYElection | #TVK | #DMK | #ADMK | #PolimerNews | #ElectionUpdateWithPolimerNews https://t.co/oDL5dX2iUB
— Polimer News (@polimernews) October 6, 2026

