தீவிர புயலாக வலுவடைந்தது 'அசானி' - 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை!!

 
tn

சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

rain

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று  காலை "அசானி" புயலாக வலுப்பெற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து,  மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை  மாலை வட ஆந்திரா-ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்குவடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Rain


இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான   'அசானி'  புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. இது வடக்கு ஆந்திரா - ஒடிசா இடையே புயல் நாளை கரையை கடக்கிறது. வங்கக் கடலில் 'அசானி' புயல் உருவானதை குறிக்கும் விதமாகசென்னை, கடலூர், நாகை, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் எச்சரிக்கை காரணமாக இன்று  டெல்டா மாவட்டங்கள் ,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,கடலூர் ,கோயம்புத்தூர் ,திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.