விடுமுறை முடிந்ததால் சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்- போக்குவரத்து நெரிசல்

 
போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து தென் மாவட்டம் பகுதியிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை நோக்கி படை எடுப்பதால் ஜானகிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Image

தீபாவளி பண்டிகையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கார் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்தனர். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து நாளை மீண்டும் வேலை நாட்கள் என்பதால்  தற்போது மீண்டும் சென்னை நோக்கி புறப்பட தொடங்கிவிட்டனர். அதிகளவு கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால் விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் மேம்பால பணி நடைபெற்று வருவதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்னை நோக்கி ஒரு வருவதனால்  அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

Image

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எல்லீஸ்சத்திரம் கூட்டு சாலை, ஜானகிபுரம் உள்ளிட்ட பல்வேறு கூட்டு சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.