என்னை பொருத்தவரைக்கும் ஜோசப் விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் இல்லை - வைகோ..!

 
vaiko

ஜி.கே.மூப்பனாரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய வைகோ, "அரசியலில் தோல்விகள் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் என்னை போல் தொடர்ந்து ஜி.கே.வாசன் பயணித்து வருகிறார். இந்திரா காந்திக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் மூப்பனார். அவரை அரசியலில் பல முறை விமர்சித்து பேசியுள்ளேன்.

இருப்பினும், விமான பயணங்களின்போது என்னை அவரது இருக்கைக்கு அருகில் அமர வைத்து அழைத்து செல்வார். மேலும், அவரது காரிலேயே என்னை வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார். விருந்தோம்பலுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் மூப்பனார். அவரது இறுதி நாட்களில் மருத்துவமனையில் அவரை தினமும் சந்தித்து விட்டு தான் வருவேன்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம், விஜய் பிரதமர் வேட்பாளர் தேர்வுக்கு பொருத்தமானவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வைகோ, "முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் அல்ல. அவர் தமிழ்நாட்டிற்கு ஏற்றவர்" என்றார்.