என்னை பொருத்தவரை கூட்டங்களுக்கு சிறு குழந்தைகளை அழைத்துச் செல்வது சரியாக படவில்லை - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்..!

 
1

எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரில் த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்... எனது கண்ணீரையும் காணிக்கையாக்குகிறேன். பெரியவர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் தப்பிப்பதற்கு அவருடைய உடலில் சக்தியும், வாய்ப்பும் உண்டு .

ஆனால், இத்தகைய கூட்டங்களுக்கு சிறு குழந்தைகளை அழைத்துச் செல்வது... என்னை பொருத்தவரை சரியாக படவில்லை. அவர்களால், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தப்பிக்க இயலுமா?.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள், இவர்கள் அனைவரும் உயிர் இழப்பதால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு தானே கெட்ட பெயர். அது மட்டுமல்லாது சரியாக பாதுகாப்பு தரவில்லை என்று அரசாங்கத்தை குறை கூறுவதற்கு வாய்ப்பு உண்டன்றோ?

இனிமேல் இவ்வாறு நிகழாமல் இருக்க கூட்டம் நடத்துபவர்கள், கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்று கட்டாயம் கண்டித்து சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.