“ரேசிங் ரொம்ப ரிஸ்க்... அஜித் நாளை மறுபடியும் பயிற்சி செய்ய உள்ளார்”- நடிகர் அருண் விஜய்

 
ச்

அஜித் குமார் ஒரு வலிமையான மனிதர் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படம் தொடர்பாக நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “வணங்கான் திரைப்படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இப்படம் முடித்து ‘ரெட்ட தல’ படத்திற்கு செல்ல எனக்கு இரண்டு மாத காலம் எடுத்துக் கொண்டது. அந்த அளவிற்கு இப்படம் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கதாபாத்திரத்திற்காக பாலா அவர்கள் என்னை படம் முடியும் வரை உடற்பயிற்சி கொடுத்திருக்கு செல்ல வேண்டாம் என கூறிவிட்டார். அதற்கான காரணத்தை படத்தில் நடிக்கும் போது நான் தெரிந்து கொண்டேன். மேலும் பல இடங்களில் ரா ஆக்ஷன் காட்சிகள் உள்ளது இருப்பினும் அனைத்தையும் தாண்டி இப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி. 

விபத்தில் சிக்கிய அஜித்… கவலையில் ரசிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போனதில் எனக்கும் மிகுந்த வருத்தம் உள்ளது. கண்டிப்பாக ஒரு நல்ல தேதியில் அப்படம் வெளியாகி வெற்றி பெறும் என நம்புகிறேன். ரேசிங் எவ்வளவு ரிஸ்க்கான விஷயம் என்பது தெரியும், பயிற்சியில் அஜித்குமார் அடிபட்ட வீடியோவை பார்த்ததும் உடனடியாக அவருடைய மேலாளர் சுரேஷ்க்கு அழைத்து பேசினேன். அவரும் அஜித் நன்றாக இருக்கிறார் என்றார். மேலும் நாளை மறுபடியும் பயிற்சி செய்ய உள்ளார். கண்டிப்பாக அஜித்குமார் ஒரு வலிமையான மனிதர், எல்லாத் துறையிலும் ரிஸ்க் இருக்கும். நிச்சயமாக அவருக்காக பிராத்திக்கிறேன். வணங்கான் படத்திற்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.