“செங்கோட்டையன் தவெகவுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின”- அருண்ராஜ்

 
ச் ச்

அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முதல்வராக அரியணை ஏற்பார் அதற்கு உதவி புரிய வந்துள்ள செங்கோட்டையன் அவர்களை வரவேற்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி அருண் ராஜ் கூறியுள்ளார்.

ச்

சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், “அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள். வளர்ந்து வரும் தவெகவிற்கு மேலும் வலுசேர்க்க, அரசியலில் அரை நூற்றாண்டு அனுபவம் பெற்ற அண்ணன் செங்கோட்டையன் இணைந்திருக்கிறார். செங்கோட்டையன் தவெகவுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின. செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளது, த.வெ.க.வுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.