அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டிருக்கிறது- ஆறுகுட்டி

 
arukutty

அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டிருப்பதாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.  

நீங்க இரண்டு பேரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்'- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக  கொந்தளிக்கும் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை  வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணைக்கு கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி விசாரணைக்கு அஜராக சம்மன் அனுப்பபட்டு இருந்தது. காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான  நிலையில், விசாரணை பிற்பகல்  2.30 மணி வரை விசாரணை நடைபெற்றது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக  மூன்றாண்டுகளுக்கு முன் கோத்தகிரியில் வைத்து ஒரு முறையும், கடந்த ஏப்ரல் மாதம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில்  ஒரு முறையும் ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு பின்னர் முன்னாள் எம்எல்ஏ  ஆறுகுட்டி பேட்டியளித்தார். அப்போது  பேசிய அவர், “கனகராஜ் இரண்டு வருடங்கள் என்னிடம் ஓட்டுனராக இருந்ததால் அவர் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. கடந்த முறை விசாரணையின் போது விடுபட்ட சில கேள்விகளை கேட்டார்கள். அதற்கு பதில் கொடுக்கப்பட்டது. எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுப்பதாக  காவல்துறையிடம் தெரிவித்து இருக்கிறேன். அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடமும் தொண்டர்களிடமும்தான்  கேட்க வேண்டும் அதிமுகவில் தற்போது  நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது” எனக் கூறினார்.