‘நானே பணத்தை இழந்துட்டேன்’... ஜாமீன் கேட்டு கெஞ்சிய ஆருத்ரா கிளை இயக்குநர்!
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனுவைத் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளையின் இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்த மோசடிக்கும், தனக்கும் எந்தத் தொடர்பு இல்லை எனவும், தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகையை ஆரூத்ராவில் முதலீடு செய்திருந்ததாகவும், அந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆரூத்ராவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும்" தெரிவித்துள்ளார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக் கொள்வது சூசைராஜன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணை வந்தபோது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர் முனியப்ப ராஜ் ஆஜராகி ஜாமீனில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.. இதையடுத்து
மீண்டும் சூசைராஜ் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.