அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு

 
college reopen

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குமென கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

Admissions to TN Arts and Science colleges to begin on Wednesday

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/  என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ந் தேதி முதல் ஜூலை 27 ந் தேதி வரையில் மாணவர்கள்  பதிவு செய்தனர். ஜூலை 27ம்  தேதி வரை கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்தனர். அவர்களில் 3,34,765மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.  2,98,056மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி பூர்த்தி செய்துள்ளனர். மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5ஆம் தேதியில் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கலந்தாயின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில், www.tngasa.in இணையதளத்தில் உள்ள மாணவர்களின் தகவல்களை கொண்டு கல்லூரி முதல்வர்கள் நடைமுறைகளை தொடங்கலாம். தரவு பாதுகாப்பை உறுதிசெய்து, எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இது கிடைக்காததை உறுதிசெய்ய வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் தரவுகளின்படி, மாணவர்கள் பதிவு செய்துள்ள பொதுத்தேர்வு பதிவெண்ணை உறுதி செய்துகொள்ள வேண்டும்.  தரவைச் சரிபார்த்த பிறகு, இறுதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். 

மாற்றுத் திறனாளிகள்,  விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினருக்கான தரவரிசை பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தமிழ் படத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தமிழ் மதிப்பெண் அதிகபட்சமாக 100 மதிப்பெண்ணை அதிகபட்சமாக கொண்டு தர வரிசை பட்டியலும், ஆங்கில பாடத்திற்கு ஆங்கில மதிப்பெண்களையும், மற்ற பாடங்களுக்கு மொழிப்பாட மொழி தவிர்த்த மற்ற பாடப்பிரிவுகள் மொத்தமாக 400 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தரவரிசை பட்டியலும் தயாரிக்கப்பட வேண்டும். தரவரிசை பட்டியல்கள் கல்லூரிகளின் இணையதளத்தில் நாளை (ஆக.3) வெளியிடப்பட வேண்டும். கல்லூரிகள் அளவில், ஒற்றைச் சாளர முறையில் கோவிட் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 69% இடஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்றி முதல் கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடத்தலாம் இது குறித்து மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் நேரடி விண்ணப்ப முறையிலும்,  விதிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.