சர்ச்சை ஆடியோ- கைதான இந்து மக்கள் கட்சி நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

 
arjun sampath

சர்ச்சை ஆடியோவால் கைதான இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக  இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான திரு. உடையார் அவர்கள் கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரையாடலில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் உள் விவகாரங்களில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தலையிடுவது இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும்.


பாஜக மாவட்ட தலைவரோடு தான் நடத்திய உரையாடலை பதிவு செய்து பொதுவெளியில் வெளியிட்டு ஹிந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே இந்து மக்கள் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது அவர் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும். 90 நாட்களுக்குள் அவரிடம் விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்சி நிர்வாகிகள் யாரும் அவரோடு இணைந்து செயல்பட்டால் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.