அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்! அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007 -2009 ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2011 ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை செப்டம்பர் 15 ஆம் தேதி அமல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. அமைச்சர் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜரான நிலையில், அவருக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாத அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

