அன்பில் மகேஷ் கைது - காவல்துறை விளக்கம்
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 1.B.T.அரசகுமார், 2.சுரேஷ் மற்றும் 3.ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

