திமுக குண்டர்களை குண்டாஸில் கைது செய்க - நாராயணன் திருப்பதி..

 
 பாஜக நாராயணன் திருப்பதி

செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில் தாக்குதல், திமுக குண்டர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என  பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

மின்சராம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்  செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கரூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கேரள மாநிலம் பாலக்காடு உள்பட  40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐடி சோதனை குறித்து தகவல் வெளியானதை அடுத்து, ஏராளமான தொண்டர்கள் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பும், சோதனை நடைபெறும் இடங்கள் முன்பும் குவியத்தொடங்கினர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த  வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். 

tn

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தனது ட்விட்டர் பதிவில், “கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்க முயற்சித்து, அவர்களின் வாகனங்களை சேதப்படுத்திய தி மு க குண்டர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். செந்தில் பாலாஜி யின் தூண்டுதலின் பேரில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கும் என்பதால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.