பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர் - தமிழக அரசு

 
ஸ்

பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக  தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின்போது  முறைகேடு குறித்து புகார் அளித்த தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர் அரசுக்கு வலியுறுத்தினர். 

Image

இந்நிலையில் பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்கவைக்கப்பட்டு நாளை ரயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறியுள்ளார். பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ள அவர், பயிற்சியாளர் கைது என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும், விசாரணைக்கு பின் காவல்நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.