#BREAKING ஆரோக்கியா பால் விலை உயர்வு
Sep 21, 2026, 17:29 IST1789991973487
ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து லிட்டர் 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தால் பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு சில மாதங்களாக ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆரோக்கியா நிறுவனமும் தற்போது பால் விலையை உயர்த்தியுள்ளது.
ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து லிட்டர் 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் தயிரின் விலையும் 88 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது பால் வாங்கும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

