"தமிழக முதல்வருக்கு அரோகரா... அமைச்சர் ரமேஷுக்கு அரோகரா - இணையத்தில் பேசுபொருளான பாடகர் வேல்முருகனின் நேரலை வர்ணனை!

 
1

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான பாடகர் வேல்முருகன் பங்கேற்று நேரலை வர்ணனை வழங்கினார்.அப்போது அவர்  எழுப்பிய 'அரோகரா' முழக்கம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவின்போது நேரலை வர்ணனை வழங்கிய பாடகர் வேல்முருகன், "முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! முதல்வர் விஜய்க்கு அரோகரா! அமைச்சர் ரமேஷ்க்கு அரோகரா!" என முழக்கமிட்டுள்ளார். ஆன்மிக நிகழ்வின் வர்ணனையின்போது அரசியல் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியது தற்போது சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.