பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்த ராணுவ அதிகாரி கைது
Oct 25, 2026, 10:40 IST1792905048569
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாக முன்னாள் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காட்டுகாநல்லூரில் பதுங்கியிருந்த முன்னாள் ராணுவ அதிகாரி பாபு கைது செய்யப்பட்டார். கடந்த 1994-ஆம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தில் பீரங்கிப் படை கேப்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாபு, மும்பையில் இருந்தபோது பாகிஸ்தான் பெண் ஒருவருடன் ரகசியத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அவர் மூலம் ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஓய்வுக்குப் பிறகும் ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்து வந்ததாக சர்வதேச போலீஸார் அளித்த தகவலின் பேரில், தமிழக போலீஸார் பாபுவைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாபு, மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

