திட்டமிட்டு நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை - பகீர் தகவல்!!

 
t

 பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

tt

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து கொலையாளிகள் இடது பக்கமாக கழுத்தில் வெட்டியுள்ளனர்.  கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டினர். 

tt

கொலையாளிகள் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.

வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் வந்தது அம்பலமாகியுள்ளது.