ஆம்ஸ்ட்ராங் கொலை ; சிபிஐ விசாரணை தேவை -மாயாவதி !

 
mayawati

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று பகுஜன்  சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே  6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று இறுதி மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அதன் பிறகு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்பு பேசிய மாயாவதி, " தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை பலப்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங். அவரது மரணம் கட்சியின் பிரச்சனை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்சனை. முதலமைச்சர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் தலித் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். ஆம்ஸ்ட்ராங் மரண வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என்றும் தெரிவித்தார்.