ஆம்ஸ்ட்ராங் கொலை - BSP தலைவர் மாயாவதி கடும் கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அடு்த்த செம்பியம் பகுதியை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரோடு நின்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர்.ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி , பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் வெளியே கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். தமிழ்நாடு அரசு குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.