என்னை நீக்க ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

 
s

பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்க ஆனந்தன், ஜெய்சங்கருக்கு அதிகாரம் இல்லை என  ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கூறியுள்ளார்.

``பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்'' - கட்சி அறிக்கை சொல்வதென்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ்,  வழக்கறிஞர் அருள், சிவசக்தி,  ஹரிஹரன்,  மலர்க்கொடி,  அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், ரவுடி நாகேந்திரன் , ரவுடி புதூர் அப்பு , சீசிங் ராஜா உள்ளிட்ட  28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் 25 பேருக்கு  எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து அவரது மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டார்  தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள பொற்கொடி, “பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்க ஆனந்தன், ஜெய்சங்கருக்கு அதிகாரம் இல்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என்பதில் ஏன் மாநில தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆனந்தன் என் மீது அவதூறான செய்தியை திட்டமிட்டு பரப்புகிறார். கட்சியில் நான் வளரக்கூடாது என அழுத்தம் தரப்படுகிறது. தலைமைக்கு இதனை கொண்டு சென்றுள்ளேன். விரைவில் மாநில செயற்குழுவை கூட்டி நல்ல முடிவு எடுப்போம். ஆனந்தனை கேள்வி கேட்டதால் என்னை பற்றி அவதூறு பரப்புகிறார். அவர் மீது புகார் கொடுக்க உள்ளேன்.” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.