ஆம்ஸ்ட்ராங் கொலை - தலைமைச்செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.