ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- தாய்லாந்து தப்பிய முக்கிய குற்றவாளி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இவர் சம்போ செந்திலின் கூட்டாளியாகும். மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவர் தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் உரையாடியதாக இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது.