ஆம்ஸ்ட்ராங் படுகொலை - 5 தனிப்படை அமைப்பு

 
ஆம்ஸ்ராங் படுகொலை - 5 தனிப்படை அமைப்பு 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள வீட்டின் அருகே நின்றுகொண்டு அவரின் ஆதர்வாளர்களுடன் பேசிகொண்டு இருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சாலையில் நின்றுகொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற இருவரையும் மர்ம கும்பல் வெட்டியுள்ளது.

இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த விழுந்த ஆம்ஸ்ட்ராங் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு கிச்சைக்காக ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்க்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடத்தப்பட்டதா அல்லது அரசியல் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Image

மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ட்ஸ்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.