ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!!

 
tt

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே  6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

tt

ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், இயக்குனர் வெற்றிமாறன், பா ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

armstrong death

இந்நிலையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நள்ளிரவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  புத்தபிட்சுகள் மந்திரங்களை முழங்க பௌத்த மத சடங்குகளுடன் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  நேற்று மாலை 4.30 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது.