ஆம்ஸ்ட்ராங் படுகொலை- கைதான ஹரிகரன் த.மா.கா.வில் இருந்து நீக்கம்

 
ஹரிஹரன்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியான ஹரிஹரனை அக்கட்சியில் இருந்து நீக்கி த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் உத்தரவிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரன் த.மா.கா.-வில் இருந்து நீக்கம் | hariharan  removed from tamil maanila congress

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 11 பேரையும் போலீஸ் காவலில் விசாரித்த போது திருவேங்கடம் என்பவர் தப்பிச்சென்ற நிலையில் அவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் முடிந்து பத்து பேரை நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர். 


போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்த நிலையில் இந்த சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகரன், சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பின்னர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து போலீசார் அடைத்தனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் பூந்தமல்லி தனிக்கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் என்பவரது தந்தையான குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இதேபோல் ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத் தலைவராவார்.

Image

இந்நிலையில் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட          திரு. K. ஹரிஹரன் அவர்கள் இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று முதல் த.மா.கா வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.