அமித்ஷாவை சந்தித்த அர்லேகர்! இருவரும் நடத்திய ரகசிய ஆலோசனை
Nov 13, 2026, 16:56 IST1794569186759
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் இன்று சுமார் 1.30 மணி நேரம் சந்தித்து பேசியிருந்த நிலையில், சந்திப்பு குறித்த புகைப்படங்களை வெளியிட்டது உள்துறை அமைச்சக அலுவலகம்.
டெல்லில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின் போது ‘திருக்குறள்' புத்தகத்தை பரிசளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர். சுமார் 1.30 மணி நேர நீண்ட சந்திப்புக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் இருந்து தமிழக ஆளுநர் அர்லேகர் புறப்பட்டு சென்றார். தமிழ்நாட்டின் சட்டம் & ஒழுங்கு , தமிழக அரசின் நிர்வாகம், அரசியல் சூழல் குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது.

