அமரன் திரை குழுவினருக்கு இந்து மக்கள் கட்சி தலைவணங்குகிறது- அர்ஜூன் சம்பத்
அமரன் திரை குழுவினருக்கு இந்து மக்கள் கட்சி தலைவணங்குகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மறைந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, வழக்கமான தனது உடல் மொழியை மாற்றி ராணுவ வீரராகவே பல்வேறு கட்ட பயிற்சிகளை எடுத்து முகுந்து வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி இதில் நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் டீசர் ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அமரன் திரை குழுவினருக்கு இந்து மக்கள் கட்சி தலைவணங்குகிறது
— Arjun Sampath (@imkarjunsampath) October 31, 2024
"அங்கே எல்லையில் நம் ராணுவம்" என்ற சொற்றொடரை நகைச்சுவையாக மாற்றிய திராவிட ஈக்கோ சிஸ்டம் உறைந்துள்ள தமிழகத்தில்
தேசபக்தி நிறைந்த திரைக்காவியத்தை சமர்ப்பித்துள்ளார் @Siva_Kartikeyan
பிரிவினைவாத ஹயனாக்கள் திரைக்குழுவினரை… pic.twitter.com/naKb4BcZut
இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமரன் திரை குழுவினருக்கு இந்து மக்கள் கட்சி தலைவணங்குகிறது. "அங்கே எல்லையில் நம் ராணுவம்" என்ற சொற்றொடரை நகைச்சுவையாக மாற்றிய திராவிட ஈக்கோ சிஸ்டம் உறைந்துள்ள தமிழகத்தில் தேசபக்தி நிறைந்த திரைக்காவியத்தை சமர்ப்பித்துள்ளார் சிவகார்த்திகேயன். பிரிவினைவாத ஹயனாக்கள் திரைக்குழுவினரை கடிக்க முற்பட்டால் அவர்களை காக்க வேண்டியது தேசியவாதிகளின் கடமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


