தமிழகத்தில் தீண்டாமை இழிவுகள் ஒழிக்கப்பட வேண்டும் - அர்ஜூன் சம்பத்

 
arjun sampath

தமிழகத்தில் தீண்டாமை இழிவுகள் ஒழிக்கப்பட வேண்டும் என முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துளார். 

தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க  வேண்டும்: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல் | arjun sampath - hindutamil.in

சிவகாசியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், “சிவகாசி மாநகராட்சியாக குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டும், வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. அதேபோன்று மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற போதிய அளவு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆன்மீக நகரமான சிவகாசியில் அமைந்துள்ள ஆலயங்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க வேண்டும். 

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் மூலப் பொருள்களின் விலை யேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய சட்டங்கள், புதிய நிபந்தனைகள் விதிப்பினால் பட்டாசு தொழில் கடுமையான நெருக்கடியை நடப்பாண்டில் சந்தித்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தொழிலை பாதுகாக்க வேண்டும். சிவகாசி வட்டாரத்தில் மதம் மாற்ற சக்திகள் ஊடுருவி செயற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதாக தமிழகத்தில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், வங்கிகளில் உள்ளூர் மொழிகளில் பேச ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்து அமல்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. 

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அறிவிக்கப்படாத மின்தடை போன்றவற்றால் தொழில் பாதிக்கப் படுவதோடு மட்டுமின்றி, மாணவ- மாணவிகளின் கல்வியிலும் தடை ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின் கட்டண உயர்வு மற்றும் தொடர் மின் தடையை கைவிட வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் வழங்கப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி, மற்றும் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய மின் சாதனங்களை ஒப்படைக்கும் போராட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெறும். சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பள்ளி மாணவருக்கு தீண்டாமை காரணமாக கடையில் மிட்டாய் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இன மக்களுக்கு எதிரான நடவடிக்கையும், தீண்டாமை இழிவுகளும் இன்று வரை தமிழகம் முழுவதும் தொடர்கிறது. இப் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து தீண்டாமை இழிவுகளை ஒழிக்க வேண்டும்” எனக் கூறினார்.