ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்ப்பதை விட்டுவிட்டு முதலில் கட்சியை வளருங்கள்! ராகுலுக்கு அர்ஜூன் சம்பத் அறிவுரை

 
arjun sampath

ஆர்எஸ்எஸ்ஐ எதிர்ப்பதை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவது நல்லது என ராகுல் காந்திக்கு அர்ஜுன் சம்பத் அறிவுறுத்தியுள்ளார்.

தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க  வேண்டும்: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல் | arjun sampath - hindutamil.in

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவில்களில் நகை கொள்ளை குறித்து அளிக்கப்படும் புகாரை காவல்துறையின் உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும். ஆர்எஸ்எஸ்ஐ எதிர்ப்பது தமது முக்கிய பணி என ராகுல் காந்தி கூறிகிறார். ஆர்எஸ்எஸ்ஐ எதிர்ப்பதை தான் முக்கிய பணியாக கொண்டிருக்கிறார். அவருடைய தாத்தா நேரு இந்தியா - சீனா போரின் போது ஆர்எஸ்எஸ் உதவியதற்காக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்தினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான படேல் ஆர்எஸ்எஸ்-ஐ ஆதரித்தார். நெருக்கடி கால கட்டத்தில் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ்ஐ தடை செய்தார். எனவே இந்திரா காந்தியை தோற்கடிக்க ஆர்எஸ்எஸ் ஜனதா கட்சியை உருவாக்கி இந்திரா காந்தியை தோற்கடித்தது. அதனால் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான கருத்துக்களை, இந்திரா, ராஜீவ், ராகுல் என தெரிவித்து வருகிறார். இதையெல்லாம் விட்டுவிட்டு, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை பார்க்கட்டும். தேர்தல் வந்தால் ராகுல் காந்தி வெளிநாடு சென்று விடுகிறார். 

கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்ப்பது தவறு அவரது கட்சியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவது நல்லது. கனல் கண்ணன் வன்முறையை தூண்டும் வகையிலோ சட்ட விரோதமாகவே எதுவும் பேசவில்லை, கோவிலுக்கு முன்பாக கடவுள் இல்லை என கூறியவரின் சிலை கூடாது என்ற நியாயமான கருத்தை தெரிவித்துள்ளார். தில்லை நடராஜரையும், ஸ்ரீ ரங்கநாதரையும் பீரங்கியை வைத்து பிளக்கும் நாளே நன்னாள் என இவர்கள் கூறினார்கள். பீரங்கியை வைத்து பிளப்பது வன்முறையா அல்லது கடவுள் இல்லை என கூறியவரின் சிலையை கோவிலின் முன்பு இருந்து அகற்ற வேண்டும் என கூறியது வன்முறையா என்பதை மக்களிடமே விட்டுவிடுகிறோம். திமுக ஆட்சிக்கு வரும் காலங்களில் அதில் திகவினர் ஊடுருவி கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளிடம் பணம் பெற்று இந்தி மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். இது போலி நாத்திகம். 


பேனா நினைவு சின்னம் அமைக்க முற்படுபவர்கள் பகுத்தறிவாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களு பணம் இல்லை என கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவை  நிதி பற்றாக்குறை என கூறி வழங்காமல் இருந்து வரும் நிலையில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் கட்டாயம் அதனை எதிர்த்து ஜனநாயக அறப்போராட்டங்களை நடத்துவோம். காவல்துறை தற்போது ஏவல் துறையாக மாறியுள்ளது. நடராஜ பெருமானை இழிவாக பேசிய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐயப்பன், சமயபுரம் மாரியம்மன், கிருஷ்ணர் என கடவுள்களை இழிவுபடுத்தி கோஷங்கள் எழுப்பி சென்றவர்களை கைது செய்யவில்லை. கனல் கண்ணன் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். நரேந்திர மோடியை கொலை செய்து விடுவேன், இந்தியாவை அழிப்போம் என  பகிரங்கமாக கூறியவர்களை ஆதரிப்பது தான் திராவிட மாடல் அரசு, இதனை மாற்றி அமைப்போம்” எனக் கூறினார்.