கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் ரூ.100 கோடி ரொக்கம் பறிமுதல்?- அர்ஜூன் சம்பத் போட்ட ட்வீட்டால் பரபரப்பு

 
கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் ரூ.100 கோடி ரொக்கம் பறிமுதல்?- அர்ஜூன் சம்பத் போட்ட ட்வீட்டால் பரபரப்பு

திமுக அமைச்சர் நேருவுக்கு சொந்தமான இடங்களில் 100 கோடி ரொக்கம்,90 கிலோ தங்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

Arjun Sampath News in Tamil, Latest Arjun Sampath news, photos, videos |  Zee News Tamil

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினறுமான அருண் நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  இதேபோல் கோவையில் உள்ள அவரது சகோதரர் மணிவன்னன் இல்லத்திலும் சோதனை நடந்தது. கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “திமுக அமைச்சர் நேருவுக்கு சொந்தமான இடங்களில் 100 கோடி ரொக்கம்,90 கிலோ தங்கத்தை பிடித்த வருமான வரித்துறை! பல கோடி சொத்துக்கள், ஓட்டல், சினிமா,சாராய கம்பெனி,மால், மருத்துவ கல்லூரிகள், ரியல் எஸ்டேட் பிசினஸ், பள்ளிக் கூடங்கள், வெளிநாடுகளில் முதலீடு என வைத்திருக்கும் கருனாநிதியின் குடும்பத்தை இந்திய நீதிமன்றங்களால் தண்டிக்கவே முடியாதா? அப்படியே தண்டனை பெற்றாலும் மேல்முறையீடு என தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்! சிறைச்சாலையில் இருந்தபடியே மந்திரிகளாக இருக்க முடிகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றங்களில் தண்டனை பெற்ற பிறகும் மீண்டும் மந்திரியாக முடிகிறது. இதையெல்லாம் தடுக்கவே முடியாதா? திமுகவின் பண பலம்,ஆட்சி அதிகார செல்வாக்கு  நீதிமன்றங்களில் ஊழல் மந்திரிகளை காப்பாற்ற பயன்படுகிறது. மத்தியில் ஆளும் கட்சிக்கு இதன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.