"இது உங்களுக்கு தேவையில்லாதது எனக் கூறி ஆதவ் அனுப்பிவைத்தார்”- பாடகர் அறிவு

 
அ

அனிதாவின் அண்ணனாக தான் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் சென்று நின்றேன் என பாடகர் அறிவு கூறினார்.

சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்  பேசிய பாடகர் அறிவு, “அனிதாவின் அண்ணனாக தான் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் சென்று நின்றேன். ஆணிகள் கொண்டு மாணவர்களை அடிப்பது எப்படிப்பட்ட அணுகுமுறை?. போராடுகிற மாணவர்களை வன்முறையை ஏவி அரசு காயப்படுத்தியதால் தான் நான் இறங்கினேன். இது அனிதாவின் போராட்டம். இந்த போராட்டத்துக்கு தீர்வுகாணும் வரை யாரும் பின்வாங்க கூடாது. அமைச்சர் ஆதவை மட்டுமே சந்தித்தேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நீட்டை ரத்து செய்ய முடியாது,நீங்க ஏன் போராட்டத்தில் இறங்குனீங்க? இது உங்களுக்கு தேவையில்லாதது என அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டார். நீட் தேர்வை மட்டும் நீக்கினால் போதுமா? இந்தக் கல்வி அமைப்பே முறைகேடாக இருக்கிறது” என்றார்.