தாராபுரம் தொகுதியில் தவெக-நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம்
தாராபுரம் பரப்புரைக் களத்தில் தவெக - நாம் தமிழர் உள்ளிட்ட இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இரு மருங்கிலும் திரண்டு முதலமைச்சர் விஜய்க்குதவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு கூடியிருந்த தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் விசில் அடித்து TVK.. TVK.. என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கட்சியின் கொடியை அசைத்து அவர்களை பார்த்து கையசைத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தவெகவினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

