காவல்நிலையத்தில் பேச்சுவார்தை - கட்டப்பஞ்சாயத்துக்கு சமம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த சோமசுந்தரம் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நன் தல்லகுளம் பகுதியில் கருப்பையா என்பவரிடமிருந்து ஒரு குடியிருப்பு நிலத்தை வாங்கினேன். இதற்காக வாங்கிய தொகையை செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு நான் கொடுத்த ஆவணங்களை தர மறுக்கின்றனர். அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகின்றனர், இதுகுறித்து நான் அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட என்ன மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,இது போன்று புகார்களில், போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிய வருகிறது. இது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமமாகும் என தெரிவித்த நீதிபதி, (i) முதற்கட்ட விசாரணைக்காக ஒரு நபருக்கு, காவல் அதிகாரி சம்மன்/அறிவிப்பு அனுப்ப இயலாது. (ii) முதற்கட்ட விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மற்றும் புகார்தாரரால் வழங்கப்பட்ட துணைப் பொருட்களைப் பார்ப்பது மட்டுமே. (iii) ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறை உடனடியாக FIR பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.
(iv) பிரிவு 173(3) BNSS இன் கீழ் எந்தவொரு விசாரணையும், DSP இன் ஒப்புதலுக்குப் பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும், மேலும் அதன் முடிவு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் மனுதாரர் மனு குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.


