நேபாளத்தில் உங்கள் உறவினர்கள் சிக்கியுள்ளார்களா? தகவல் அறிய 24 மணி நேர உதவி எண்கள் இதோ!

 
1

நம் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று முன்தினம், பனிப்பாறை சரிவால் உருவான திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் பெரும் நிலச்சரிவு, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் புதிதாக ஒரு பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளதாக சீனா கூறியுள்ளது. நேபாள எல்லைக்கு அருகே உள்ள சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்துக்கு அருகே இந்த பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு ஏற்கனவே 7.6 கோடி கன அடியை தாண்டி, தற்போது வழிந்து கொண்டிருக்கிறது. 

அடுத்த மூன்று நாட்களில், மேலும் 10.60 கோடி கன அடி தண்ணீர் அதில் சேரும் என கணிக்கப்பட்டுள்ளது-. இத்தடுப்பு ஏரி எதிர்பாராதவிதமாக உடைந்தால், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள பகுதிகள் மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சீனா எச்சரித்துள்ளது. மீட்கும் பணி தீவிரம்! நேபாள - திபெத் எல்லை பகுதியான ராசுவாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதில், 300 இந்தியர்களும் அடங்குவர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

ஷிஷிர் கனால் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் 332 பேர் பலி! • திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது • பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 40க்கும் மேற்பட்ட தனியார் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நேபாள சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 33க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாயமாகியுள்ளனர்.• கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் என, நம் நாட்டைச் சேர்ந்த, 280க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 65 பேரும், மலேஷியாவைச் சேர்ந்த, 51 பேரும் காணாமல் போயுள்ளனர். நேபாள நீர் மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 9 தொழிலாளர்களும் காணாமல் போயுள்ளனர்.நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு, பனிப்பாறை சரிவினால் ஏற்பட்டதே தவிர, நிலநடுக்கத்தினால் அல்ல என, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.


நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடக்கி விடப்பட்டு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த 21 பேர் உட்பட இந்தியர்கள் 33 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், 288 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்து உள்ளது.தொலைபேசி எண்கள்+91 11 2308 8718+91 11 2308 8719+91 11 2301 2113வாட்ஸாப்: +91 9968291988இமெயில் முகவரி: mea.gov.inகாத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள+977 985 131 6807+977 970 910 7500+977 981 032 6117இதே எண்களில் வாட்ஸாப் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

சீனாவில் உள்ள இந்தியத்தூதரகத்தை தொடர்பு கொள்ள:
+86 18514284905இதே எண்ணில் வாட்ஸாப் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

நேபாள அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
Tourist Police: +977 9851289445Nepal Army: +977 9851072914 (email: dgmi-nepalarmy.mil.np)NDRRMA: +977 9851320269 / +977 9849281097 / Police: +977 9851254960Assistant Chief District Officer, Rasuwa: +977 9851164422Nuwakot Police: +977 9851282380Assistant Chief District Officer, Nuwakot: +977 9851248777Dhading Police: +977 9851229860Chief District Officer, Dhading: +977 9851247777Chitwan Police: +977 9855013999Assistant Chief District Officer, Chitwan: +977 9855088891